விருதுநகர் மாவட்டம் முழுவதும் டி.ஆர்.ஓ மற்றும் மத்திய பெட்ரோலிய வெடிப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமம் பெற்ற ஆயிரத்து ஆறுபது பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட விற்பனை கடைகள் உள்ளன.
வருடத்தில் ஒரு நாள் தீபாவளி பண்டிகைக்காக, ஓராண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சொற்ப அளவிலேயே ஊதியம் வழங்கப்படுவதால், வாழ்வாதாரத்தின் தரம் கீழ் நிலையிலேயே இருந்து வருகின்றன.
பட்டாசு ஆலைகளில் வேலை இல்லாத காலங்களில் அன்றாட செலவுகளை சமாளிப்பதற்காக வெளியில் வட்டிக்கு கடன் வாங்குவதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.