திருக்கோவிலூரில் கால்கள் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி: ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்

திருக்கோவிலூரில் கால்கள் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி: ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்
திருக்கோவிலூரில் கால்கள் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி: ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கால்கள் இல்லாமல் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் ராஜேந்திரன். விவசாயியான இவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருவதோடு, விவசாயமும் செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அவரது வீட்டு தோட்டத்தில் கன்று ஈன்றது. ஆனால் அந்த கன்றுக்கு கால்கள் இல்லை. இதனால் அந்த கன்று அங்கும் இங்குமாக தவழ்ந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் செய்வதறியாது திகைத்தார். பின்னர் தாய் பசுவிடம் பால் எடுத்து அதை பாட்டிலில் அடைத்து கன்றுக்கு ஊட்டினார். பசுமாடு ஈன்ற கன்றுக்கு கால்கள் இல்லாத தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கால்கள் இல்லாத கன்றுக்குட்டியை பார்த்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com