நாமக்கல் : தனியார் மருத்துவமனையில் இருந்து குதித்து பெண் நோயாளி தற்கொலை

நாமக்கல் : தனியார் மருத்துவமனையில் இருந்து குதித்து பெண் நோயாளி தற்கொலை
நாமக்கல் : தனியார் மருத்துவமனையில் இருந்து குதித்து பெண் நோயாளி தற்கொலை
Published on

நாமக்கலில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துறையூரை சேர்ந்தவர் கோகிலா(34). இவர் சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண் திடீரென தனியார் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com