கொரோனா பொதுமுடக்க காலத்திலும் நுண் கடன் நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதாக வேதாரண்யத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் புகார் எழுப்பியுள்ளனர்.
பொதுமுடக்க காலத்தில் வங்கிகள், நுண் கடன் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கடன் வசூலை கட்டாயப்படுத்தக் கூடாதென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, வேதாரண்யத்தில் நுண் கடன் நிறுவனத்தினர் கட்டாயப்படுத்தி கடனை வசூலித்து வருவதாக மகளிர் சுய உதவிக்குவினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பொதுமுடக்கத்தால் வருவாய் இழந்துள்ள நிலையில், ஊரடங்கு முடியும் வரை கடன் வசூலை நிறுத்தி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். வேதாரண்யம், நாகை நுண்கடன் நிறுவனங்கள் மீது மகளிர் சுய உதவிக்குழுவினர் குற்றச்சாட்டு கடனை திருப்பிச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதாக வேதனை பொதுமுடக்கத்தால் வருவாய் இழந்த நிலையில் மகளிர் தவித்து வருகின்றனர்.