பெண்கள் விரும்பினால் பயிற்சி அளித்து அர்ச்சர்களாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் சேகர்பாபு

பெண்கள் விரும்பினால் பயிற்சி அளித்து அர்ச்சர்களாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் சேகர்பாபு
பெண்கள் விரும்பினால் பயிற்சி அளித்து அர்ச்சர்களாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் சேகர்பாபு
Published on

கோயில்களில் பெண்கள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கும் பயிற்சியளித்து பணியில் அமர்த்தப்படுவர் என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இந்துசமய மண்டல ஆணையர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சேகர் பாபுவின் பேட்டியின் முழுவிவரம் பின்வருமாறு:-

100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்கிற திட்டம்:

"இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளை வேகப்படுத்தி, துறையை புதுப்பொலிவுடன் மாற்ற ஆலோசனை நடத்தினோம். திமுக பதவி ஏற்ற நாளில் இருந்து, வெளிப்படைதன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழில் சில இடங்களில் அர்ச்சனை செய்யப்படுகிறது. முக்கிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்கிற பதாகை வைக்கப்படும். அதில் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் விபரம் இடம்பெறும். 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்கிற திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டம் உள்ளது, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு விரைவில் அர்ச்சகர் ஆக்க பட நடவடிக்கை எடுக்கப்படும். அர்ச்சகர்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில் அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஜீயர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை:

ஜீயர்கள் நியமிக்கிற முறநியாயமான, நேர்மையாக, வெளிப்படை தன்மை கொண்ட ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. இந்து சமய அறநிலைய துறை கீழ் உள்ள கோயில்களில் 30 யானைகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க மருத்துவர்கள் அடங்கிய இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது

தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பதாகை:

அர்ச்சகர்களாக இருப்பவர்கள் தாங்கள் இந்த பயிற்சியை எடுக்க விரும்பினால் அவர்களுக்கும் பயிற்சி அளித்து அவர்களையும் அர்ச்சகர்களாக்கும் முயற்சியை முதல்வரின் அனுமதியோடு பெறுவோம். தற்போது அனைத்து திருக்கோவில்களிலும் குறிப்பாக 47 திருக்கோவில்களுக்கு உடனடியாக தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பதாகையை வைக்க இருக்கின்றோம். அதில், தமிழில் அர்ச்சனை செய்பவர்களின் பெயர் மற்றும் கைபேசி எண்ணுடன் பாதாகைகள் வைப்பதென்று முடிவெடுத்திருக்கின்றோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com