மதுரை: ஜோதிடம் பார்ப்பதாக கூறி நூதன திருட்டு - மூன்று பெண்கள் கைது

மதுரை மாவட்டத்தில் ஜோதிடம் பார்ப்பதாக கூறி வீட்டில் 8 லட்சம் ரொக்கம், 10 சவரன் நகையை திருடிய மூன்று பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
accused
accusedpt desk
Published on

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பங்களாமேடு பகுதியில், போதுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சிறுமி மட்டும் இருந்தபோது ஜோதிடம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்து 8 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 சவரன் நகையை நான்கு பெண்கள் திருடிச் சென்றுள்ளனர்.

arrest
arrestpt desk

இது தொடர்பாக உசிலம்பட்டி நகர காவல் துறையினர், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நான்கு பெண்களை தேடிவந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த பெண்கள் நால்வரும் வேறு ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உசிலம்பட்டி காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

accused
துணிக்கடையில் காஸ்ட்லி பட்டு புடவைகள் திருட்டு.. CCTV காட்சிகள் வெளியானதால் திருப்பி கொடுத்த பெண்கள்

சிறையிலிருந்த நான்கு பேரில் ஈரோட்டை சேர்ந்த கவிதா, முத்தம்மாள், மீனாட்சி ஆகிய மூன்று பெண்களை பிணையில் எடுத்து, உசிலம்பட்டி திருட்டு வழக்கில் கைது செய்து மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதான மூன்று பெண்களுக்கும் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com