பெண்ணை மாடு முட்டிய விவகாரம் - “கால் தொடைப் பகுதி அழுகிவிட்டது...” - பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர்!

சென்னை திருவொற்றியூரில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த பெண்ணின் கால் பகுதி அழுகிப்போன சோகம் அரங்கேறியுள்ளது. அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், முழுவதுமாக காலை அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.
பெண்ணைத் தாக்கும் மாடு
பெண்ணைத் தாக்கும் மாடுpt web
Published on

மாடு முட்டியதில் தாக்கப்பட்ட பெண்

சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் வினோத். இவரது மனைவி மதுமதி, கடந்த 16ஆம் தேதி தனது வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு நடந்து சென்றார். அப்போதுதான் அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. தெருவில் நடந்து சென்றபோது எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு எருமை மாடு, மதுமதியை வேகமாக முட்டி தூக்கி, சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு தர தரவென இழுத்துச் சென்றது.

மாடு முட்டியதில் காலில் பலத்த காயமடைந்த மதுமதியை உறவினர்கள் மீட்டு, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மதுமதியின் காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு 40 தையலுக்கு மேல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெண்ணைத் தாக்கும் மாடு
நெல்லை | இருசக்கர வாகனத்தின் மீது முட்டிய மாடு... பரிதாபமாக உயிரிழந்த நபர்

அழுகிய நிலையில் காலின்தொடைப் பகுதி

சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆன நிலையில், மதுமதியின் கால் தொடை பகுதி அழுகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காலில் அழுகிய நிலையில் இருந்த சதைப்பகுதியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மேலும், அகற்றப்பட்ட சதைப்பகுதியில், மற்றொரு காலில் இருந்து சதைப் பகுதியை வெட்டி எடுத்துவைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வினோத் கூறுகையில், “தையலைப் பிரித்து பார்த்ததும் கால் பகுதியில் அழுகி இருந்தது தெரியவந்தது. மற்றொரு காலில் இருந்து சதையை எடுத்து இந்த காலில் வைத்து அறுவை சிகிச்சை மீண்டும் செய்ய வேண்டும் என்றார்கள். ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துவிட்டேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்ததால் அதைவைத்து எப்படியோ சமாளித்துவிட்டேன். இதற்கும் மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அரசாங்கம் எதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்” என தெரிவித்தார்.

பெண்ணைத் தாக்கும் மாடு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு; சென்னையில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி கைது

வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் வினோத்

மனைவியின் கால் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் கணவர் வினோத், மனைவிக்கு மாடு முட்டி காயம் ஏற்பட்டதிலிருந்து வேலைக்கு செல்ல முடியவில்லை என்பதால், இக்கட்டான சூழலில் இருப்பதாக தனது தவிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

சென்னையில் சாலையில் சுற்றித்தெரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகள் குறித்து மாநகராட்சி தொடர்ந்து எச்சரிக்கை செய்தும், மாட்டை முறையாக கட்டி வைக்காமல் சாலையில் அவிழ்த்துவிட்ட அலட்சியத்தால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கால் பகுதி, மேலும் அழுகாமல் காப்பாற்ற உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும். விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார், கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் மதுமதி.

பெண்ணைத் தாக்கும் மாடு
பால் கேன்கள், அட்டை பெட்டிகள், நீர் தெளிப்பான்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி; டெல்லி கூட்டத்தில் பரிந்துரை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com