11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பெண்: நிரபராதி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பெண்: நிரபராதி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பெண்: நிரபராதி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
Published on

கடந்த 11 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பெண், நிரபராதி என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருச்சி தாத்தையங்கார் பேட்டையைச் சேர்ந்த சகுந்தலா என்பவருக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட குடும்பத் தகராறில் சகுந்தலா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், மறுநாள் சகுந்தலாவின் 1.5 வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் திருச்சி கீழமை நீதிமன்றம் சகுந்தலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சகுந்தலா மேல்முறை செய்த நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் சகுந்தலா உச்ச நீதிமன்றம் சென்றார். இந்நிலையில், சகுந்தலாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், மீண்டும் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற கிளைக்கு உத்தரவிட்டது. அதன்படி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், இந்த வழக்கில் சின்ன சின்ன விஷயங்கள் கூட விசாரிக்கப்படவில்லை. சாட்சிகள் கூறிய தகவலின் அடிப்படையில் சகுந்தலாவுக்கு கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது என சகுந்தலாவுக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவரை நிரபாராதி என தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். சகுந்தலாவிடம் அபராதம் வசூலிக்கப்பட்டிருந்தால் அதை திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com