ஆதிமனிதராய் திரிந்தவருக்கு ஆடை போர்த்தி மனிதாபி'மானம்' காத்த மங்கை

ஆதிமனிதராய் திரிந்தவருக்கு ஆடை போர்த்தி மனிதாபி'மானம்' காத்த மங்கை
ஆதிமனிதராய் திரிந்தவருக்கு ஆடை போர்த்தி மனிதாபி'மானம்' காத்த மங்கை
Published on

நெல்லையில் ஒட்டுத் துணியில்லாமல் சாலையில் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு இளம் பெண் ஒருவர் இடுப்பில் ஆடையை கட்டிவிட்டு, பாசத்துடன் உணவும் ஊட்டிவிட்ட காணொலி வேகமாக பரவி வருகிறது.

திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் நந்தினி. சமூக செயற்பாட்டாளரான இவர், நெல்லை - மதுரை நான்கு வழிச்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது கங்கைகொண்டான் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர், உடலில் ஒட்டுத் துணியில்லாமல் நடந்து வருவதைக் கண்டார். உடனடியாக இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த சால்வையை எடுத்துச் சென்று, அந்த ஆணின் இடுப்பில் கட்டிவிட்டார். மேலும், அருகில் இருந்த கடைக்கு சென்று உணவும் வாங்கி வந்து, அந்த நபருக்கு தன் கையாலேயே ஊட்டிவிட்டார்.

வயதானவர்களே மனநலம் சரியில்லாதவர்களை நெருங்கி உதவ அஞ்சும் சூழலில், இளம் பெண்ணான நந்தினி ஆடை கட்டிவிட்டு பரிவுடன் உணவு ஊட்டிய மனிதாபிமான குணத்தை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com