திண்டுக்கல் : கனமழை காரணமாக இடிந்து விழுந்த சுவர்.. சாலையில் சென்ற பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்தார்.

புது ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த கற்பகம் என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது காமராஜ் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து, கற்பகத்தின் மீது விழுந்துள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அக்கம் பக்கத்தினர் கற்பகத்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கற்பகம் உயிரிழந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com