புதுக்கோட்டை: பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக பெண் தற்கொலை – 3 காவலர்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை: பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக பெண் தற்கொலை – 3 காவலர்கள் பணியிட மாற்றம்
புதுக்கோட்டை: பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக பெண் தற்கொலை – 3 காவலர்கள் பணியிட மாற்றம்
Published on

புதுக்கோட்டை அருகே போலீசார் பொய் வழக்கு போட்டு மிரட்டியதாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான 3 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரது மனைவி கோகிலா கடந்த ஒன்றாம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட பாதை பிரச்னையில் போலீசார் தன் மீது பொய் வழக்கு போட்டு மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், தனது சாவிற்கு கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஷ மூன்று போலீசாரும், தமது பக்கத்து வீட்டுக்காரர் உள்ளிட்ட ஒவ்வொருதான் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து அந்த பெண் கடிதத்தில் குறிப்பிட்ட போலீசார் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல், காவல் நிலைய முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கோகிலாவின் சடலத்தையும் வாங்காமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் காவலர்கள் கிரேசி, புவனேஸ்வரி ஆகிய மூவரையும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.

அதேபோல, புகாரில் அளிக்கப்பட்டுள்ள கோகிலாவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் மூவர் மீதும் ஆர்டிஓ விசாரணைக்கு பின்னர் அளிக்கப்படும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் நடவடிக்கை தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கோகிலாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com