ஆறாத்துயரத்திலும் ஜனநாயகக் கடமையாற்றிய பெண் : கடலூரில் நெகிழ்ச்சி சம்பவம்

ஆறாத்துயரத்திலும் ஜனநாயகக் கடமையாற்றிய பெண் : கடலூரில் நெகிழ்ச்சி சம்பவம்
ஆறாத்துயரத்திலும் ஜனநாயகக் கடமையாற்றிய பெண் : கடலூரில் நெகிழ்ச்சி சம்பவம்
Published on

புவனகிரி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவின்போது நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கணவன் இறந்த நிலையில் வீட்டில் சடலத்தை வைத்துக்கொண்டு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து ஐனநாயக கடமையாற்றியுள்ளார் ஒரு பெண்.

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் இன்று காலை 7 முதல் மறு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கெனவே இந்த வாக்குச் சாவடியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று வாக்குப் பதிவின்போது 4வது வார்டுக்கு உட்பட்ட முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி வனிதா என்பவர், சில பெண்களுடன் ஆட்டோவில் வாக்களிக்க வந்தார். அப்போது அவர் அழுதபடியே வாக்களித்து விட்டுச்சென்றார். இதுபற்றி விசாரித்தபோது உடல்நலக்குறைவால் அவரது கணவர் சங்கர் இன்று காலை இறந்ததாகவும், அவரது சடலம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வனிதா வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்ததும் தெரிய வந்தது.

பின்னர் வாக்குப்பதிவை முடித்தவுடன் அவர் வீட்டிற்கு திரும்பிச்செல்ல ஆட்டோவிற்கு சொல்லிவிட்டு அவர் காத்திருந்தார். ஆனால் அதற்குள் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வனிதாவை இருசக்கர வாகனத்திலேயே வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இறந்த கணவனின் சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு, வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com