5 தொகுதிகளில் ரத்தாகுமா தேர்தல்? - என்ன சொல்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

5 தொகுதிகளில் ரத்தாகுமா தேர்தல்? - என்ன சொல்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
5 தொகுதிகளில் ரத்தாகுமா தேர்தல்? - என்ன சொல்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
Published on

கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு அளித்துள்ள நிலையில், அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கில் திமுக பணம் பட்டுவாடா செய்ததாக இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் நவீன முறையில் திமுக பணப்பட்டுவாடா செய்வதாக அந்த மனுவில் அதிமுக புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, பணப்பட்டுவாடா புகாரில் தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும் என்று கூறினார். தேர்தல் தொடர்பான புகார்களை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com