ஆளுநருடன் இணக்கமானபோக்கை கடைபிடிப்பாரா புதிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்?

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி செழியன் புதிதாக பதவியேற்றுள்ள நிலையில், அந்த துறையில் அவருக்கு இருக்கும் சவால்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
கோவி செழியன் - ஆளுநர் ரவி
கோவி செழியன் - ஆளுநர் ரவிபுதிய தலைமுறை
Published on

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒருசில துறைகளைத்தவிர, மற்ற முக்கியமான துறைகள் இவர்களுக்குத்தான் ஒதுக்கப்படும் என்பதைக்கூறிவிடலாம். அப்படித்தான் அமைச்சர் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை மாறாமல் இருந்தது. இதே நிலை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையிலும் நீடித்திருந்தது.

ஆனால் திடீர் திருப்பமாக தற்பொழுது பொன்முடியிடம் இருந்து உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டு வனத்துறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் ரவிக்கும் பொன்முடிக்கும் அடிக்கடி ஏற்பட்ட முறன்பாடான போக்குதான் காரணம் என்கிறது அரசியல் வட்டாரம்.

பொன்முடி-ஆளுநர் ரவி
பொன்முடி-ஆளுநர் ரவி

உயர்கல்வித்துறையின் புதிய அமைச்சராக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோவி செழியன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப் 29) முதன்முறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

கோவி செழியன் முன்னுள்ள எதிர்பார்ப்புகள்!

முதன்முறையே அவருக்கு உயர்கல்வித்துறை வழங்கப்பட்டு இருக்கிறது. முனைவர் பட்டம் பெற்ற செழியன், ஆளுநரை சமாளிப்பாரா? ஆளுநர் மற்றும் அமைச்சரிடம் நல்ல புரிதல் ஏற்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவி செழியன் - ஆளுநர் ரவி
தமிழக அமைச்சர்கள் எத்தனைபேர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன? - உச்சநீதிமன்றம் கேள்வி

கோவி செழியன் முன்னுள்ள சவால்கள்...

உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக மத்திய அரசே பாராட்டி இருக்கும் நிலையில்,

  • அண்ணா பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் என்ற முக்கிய பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லை...

  • அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம்

உள்ளிட்டவை கோவைச் செழியனுக்கு சவாலானவை.

மத்திய அரசின் கல்விக்கொள்கைகளை தமிழக அரசு ஏற்குமா? அது குறித்து அழுத்தம் கொடுக்கும் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ரவியை அமைச்சர் கோவி செழியன் எப்படி சமாளிப்பார்? என்ற கேள்வியும் அவர்முன் உள்ளது.

துணை வேந்தர்களைத் தேர்வு செய்வதில், மாணவர்களை உலகத்தரத்திற்கு கொண்டுச்செல்லும் ஆற்றல் படைத்தவர்களை தேர்வு செய்வதில் ஆளுநரின் ஒப்புதலை பெருவாரா? என்பதெல்லாம் அவரது செயல்தான் பதில் தரும்.

கோவி செழியன் - ஆளுநர் ரவி
நிலையான பொறுப்பாளர்கள் இல்லாததால் நிர்வாகத்தில் தள்ளாடும் பாரதியார் பல்கலைக்கழகம்! நடப்பது என்ன?

மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இணக்கமான சூழல் ஏற்பட்டால் உயர்கல்வித்துறையின் எதிர்காலம் தொடரும்... இல்லாவிட்டால் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் என்ற பெயர் இறங்கிவிடும் அபாயம் இருக்கிறது.

இதற்கிடையே இன்றைய தினம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநருடன் கலந்துகொண்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்.

பொன்முடி கடந்த சில நிகழ்ச்சிகளில் ஆளுநரோடு பங்குபெறுவதை புறக்கணித்து வந்த சூழலில் (கடந்த செப். 24 சென்னை பல்கலைக்கழக 166ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநரோடு அமைச்சர் பொன்முடி பங்கேற்றிருந்தார்; இருப்பினும் கடந்த காலங்களில் பல சூழல்களில் அவர் ஆளுநரோடு பங்குபெறுவதை தவிர்த்தே வந்தார்), செழியன் ஒரே மேடையில் பங்கேற்றதும் ஆரோக்கியமான சூழலாக பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து அவர் எப்படி செயல்படுவார் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com