தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் அக்கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த விஷால், இதனை தெரிவித்தார்.
அதில், “நானும் ஒரு வாக்களர்தானே. ஒரு அரசியல்வாதியாக அவர் மக்களுக்கு என்ன கூறப்போகிறார், தற்போதுள்ள அரசியல் வாதிகளைவிட அவர் என்ன நல்லது செய்யப்போகிறார் என்பதை மக்களின் மத்தியில் நானும் பார்க்க்கப்போகிறேன். அதற்கு எதற்கு அழைப்பு?
அழைக்காவிட்டாலும் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கவேண்டியதுதான். இதை எதற்கு டிவியில் பார்க்கணும். நேரில் பார்த்தா நல்லதுதானே. தவெக-வில் நான் இணைவேனா என்பது தேவையில்லாத கேள்வி. முதலில் மாநாடு நடக்கவேண்டும், கொள்கைகள் தெரியவேண்டும்... பின்னரே அதெல்லாம் யோசிக்க முடியும். 2026 தேர்தல் வரை நிறைய நேரம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.