உணவு தேடி ஊருக்குள் புகுந்து கரும்புத் தோட்டத்தை துவம்சம் செய்த காட்டு யானைகள்

உணவு தேடி ஊருக்குள் புகுந்து கரும்புத் தோட்டத்தை துவம்சம் செய்த காட்டு யானைகள்

உணவு தேடி ஊருக்குள் புகுந்து கரும்புத் தோட்டத்தை துவம்சம் செய்த காட்டு யானைகள்
Published on

காரிமங்கலம் அருகே உணவு தேடி வந்து கரும்புத் தோட்டத்தில் புகுந்த 3 யானைகளை 12 மணி நேரத்திற்குப் பிறகு வனத்திற்குள் விரட்டியடிகப்பட்டது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முக்குளம் பஞ்சாயத்து குட்டகாட்டூர் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டம் உள்ளது. இன்று அதிகாலை தண்ணீர் தேடி 3 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

அப்பொழுது சீனிவாசனின் கரும்புத் தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து யானை பிளிறும் சத்தம் கேட்டு அச்சமடைந்த சீனிவாசன், வீட்டின் மேல் ஏரி பார்த்துள்ளார். அப்பொழுது கரும்பு தோட்டத்தில் யானைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பாலக்கோடு வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் தலைமையில் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர்; யானைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தேன்கனிக்கோட்டை மற்றும் பாலக்கோடு வனத்துறையினர் வெடி வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து மூன்று யானைகளும் பாலக்கோடு வனப் பகுதியை நோக்கிச் சென்றது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com