மலேசியாவில் இறந்த கணவரின் சடலத்தை மீட்க போராடும் மனைவி

மலேசியாவில் இறந்த கணவரின் சடலத்தை மீட்க போராடும் மனைவி
மலேசியாவில் இறந்த கணவரின் சடலத்தை மீட்க போராடும் மனைவி
Published on

புதுக்கோட்டையிலிருந்து பிழைப்பு தேடி மலேசியாவுக்கு சென்றவர் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்து‌ள்ள நிலையில், அவரின் சடலத்தை மீட்க முடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர், வறுமையின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். மலேசியாவில் சரியான வேலையின்றி, மதியழகன் கஷ்டப்பட்ட நிலையில், ஊரில் அவரது குடும்பத்தினரும் வறுமையில் வாடியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி அன்று, மதியழகன் இறந்துவிட்டதாக, அங்குள்ளவர்கள், அவரது மனைவி ரேவதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ரேவதி மதியழகனை மலேசியா அனுப்பிய ஏஜெண்ட்டிடம் கேட்டபோது முறையான பதில் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் தனது கணவரை மீட்டுத்தர கோரி மனு கொடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com