உடல் நிலை சரி இல்லாத போதும் விடுப்பு அளிக்கததால் பணி நேரத்தில் மயங்கி விழுந்த உதகை போக்குவரத்து காவலர்...
கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு காரணம் விடுமுறை அளிக்காத போக்குவரத்து எஸ்ஐ, மற்றும் டி எஸ்பி மேடம் தான் வீடியோ வெளியிட்ட காவலரின் மனைவி.
வீடியோ வைரலான நிலையில், விளக்கமளித்து மேலும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை நகரில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் கலையரசன். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று ட்ராபிக் இன்ஸ்பெக்டரிடம் விடுப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் விடுப்பு அளிக்காததால் டிஎஸ்பி இடம் சென்று முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரும் விடுப்பு தராமல் திருப்பி அனுப்பிய நிலையில் மாத்திரையை சாப்பிட்டு விட்டு பணியாற்றியபோது மயங்கி விழுந்துள்ளார் கலையரசன்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு அருகில் அமர்ந்த படி பேசிய மனைவி, காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தது மட்டுமின்றி, கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்த மூவர் தான் காரணம் என கூறி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், வீடியோ வைரலானது.
இந்நிலையில், காவலர்களுக்கு வார விடுப்பு அளிக்கப்பட்டது தெரியாமல் தான் ஆதங்கத்தில் பேசிவிட்டதாக மீண்டும் மற்றொரு வீடியோ பதிவையும் அவர் வெளியிட்டு உள்ளார். அதில் என்னுடைய ஆதங்கத்தில்தான் நான் அப்படி பதிவிட்டேன். ஆனால் நீங்கள் விடுப்பு அளித்தது எனக்கு தெரியவில்லை. காவலர்களுக்கு வாரவிடுப்பு அளித்த அதிகாரிகளுக்கு நன்றி என்று வீடியோவில் பேசியுள்ளார்.