மேலூர் அருகே, தகாத உறவுக்கு இடையூராக இருந்த கணவரை கொலை செய்து சாக்குப்பையில் கட்டி வீசிச்சென்றதை மனைவி ஒப்புக்கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பூதகுடியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி செல்லம்மாள். திருமணம் முடிந்து சில காலங்களுக்குப்
பிறகு, வடிவேல் பணிக்காக சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் அவர் பணியாற்றியுள்ளார். குடும்ப
செலவிற்கும், எதிர்கால சேமிப்பிற்கும் வாங்கும் வடிவேலின் ஊதியம் போதவில்லை என செல்லம்மாள் கூலி வேலைக்கு
சென்றுள்ளார். வேலைக்கு செல்லும் இடத்தில் கலையரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடையில் தகாத உறவாக மாறியுள்ளது. இது தொடர்பாக வடிவேலுவிற்கு தெரியவர, மனைவியுடன்
தொலைபேசியில் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து ஊருக்கு புறப்பட்டு வந்த வடிவேல், செல்லம்மாளிடம் தொடர் சண்டையில்
ஈடுபட்டுள்ளார். மேலும் கலையரசனையும் எச்சரித்துள்ளார். தனது தகாத உறவிற்கு இடையூராக இருந்த கணவரை செல்லம்மாள்
கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கு உதவியாக கலையரசனையும் அழைத்துள்ளார்.
தங்கள் திட்டப்படி வடிவேலிடம் இனி திருந்தி வாழ்வதாக பொய்யான பேச்சுக்களை பேசி செல்லம்மாள் நாடகமாடியுள்ளார். வடிவேல்
குடிப்பழக்கம் உடையவர் என்பதால், செல்லம்மாள் அவருக்கு மது வாங்கிக்கொடுத்துள்ளார். விவரம் அறியாத வடிவேல் மதுவை
குடித்துவிட்டு, போதையை நிலையை அடைந்துள்ளார். பின்னர் கலையரசனை வீட்டிற்கு அழைத்து, தங்கள் திட்டப்படியே
இரும்புக்கம்பியால் கணவரை தாக்கியுள்ளார். இருவரும் வடிவேலை உயிர்போகும் வரை தாக்கியுள்ளனர். வடிவேல் இறந்த பின்னால்,
அவரது உடலை சாக்குப்பையில் ஒன்றில் போட்டு கட்டியுள்ளனர்.
பின்னர் அந்த உடலை தூக்கிச்சென்று, நான்கு வழிச்சாலை அருகே ஓடும் ஓடையில் வீசியுள்ளனர். வீடு திரும்பிய செல்லம்மாள்,
அடுத்த நாள் தனது கணவரை காணவில்லை என நாடகமாடியுள்ளார். இந்தச் சம்பவம் நடைபெற்று ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது.
இந்நிலையில் கலையரசனுக்கும், செல்லம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரின் உறவிலும்
விரிசல் ஏற்பட்ட நிலையில், செய்த குற்றங்களை ஒப்புக்கொள்ள செல்லம்மாள் முடிவுசெய்துள்ளார். அதன்படி, காவல்நிலையம் சென்ற
செல்லம்மாள், தகாத உறவுக்காக ‘என் கணவனைக் கொன்றேன்’ என நடந்ததை கூறியுள்ளார். செல்லம்மாளை அழைத்துக்கொண்டு
நான்குவழிச்சாலை ஓடைக்கு சென்ற காவலர்கள், அங்கு சாக்குப்பையில் வடிவேலுவின் எலும்புக்கூட்டை மீட்டனர். பின்னர்
செல்லம்மாள் மற்றும் கலையரசனை கைது செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.