கணவனை இழந்த பெண்ணை அவரது கொழுந்தனார் அரிவாள் மனையால் ஓட ஓட வெட்டிய கொடூரம்

கணவனை இழந்த பெண்ணை அவரது கொழுந்தனார் அரிவாள் மனையால் ஓட ஓட வெட்டிய கொடூரம்
கணவனை இழந்த பெண்ணை அவரது கொழுந்தனார் அரிவாள் மனையால் ஓட ஓட வெட்டிய கொடூரம்
Published on

சொத்து பிரச்னை காரணமாக கணவனை இழந்த பெண்ணை உறவினர் ஒருவர் அரிவாள்மனையால் ஓட ஓட வெட்டிய சம்பவம் திட்டக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் வசித்துவருபவர் காவேரி. கணவனை இழந்த இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது கணவரின் சகோதரர், சகோதரிக்குமிடையே சொத்து சம்பந்தமான பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் சுப்பிரமணியனுக்கும், அவரது அண்ணி காவிரிக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து பிரச்னை கைக்கலப்பாக மாறியதில் காவிரியை அங்கிருந்த அரிவாள்மனையால் சரமாரியாக வெட்டியதில் தலை மற்றும் கையில் படுகாயம் அடைந்த அவரை அருகிலுள்ள வேப்பூர் மாற்றம் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பதால் தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக காவல் துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் இருந்த நபர் கொடூரமாக அரிவாள்மனையால் வெட்டுவதை தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com