“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்லப்படுவதாக போலியான வீடியோக்களை பரப்பிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த யூ-டியூப்பர் மணிஷ் காசியப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தமிழக காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில், ஏற்கனவே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த இவர், தன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி தனியாக மனுதாக்கல் செய்திருந்தார் மணிஷ் காசியாப் தொடர்ந்து வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து வரும் நிலையில், கடந்த விசாரணையின் போது ஏன்? மனிஷ் காசியாப் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மனிஷ் காசியாப் போலியான வீடியோக்களை பரப்பியதுடன் இனவாத வெறுப்புணர்வை தூண்டும் நோக்கில் செயல்பட்டதாகவும், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வீடியோவில் பதிவு செய்த போது பின்னணியில் போலியான வீடியோக்களை புனையும் நோக்கில் பதிவேற்றியதாக தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிஷ் காய்ச்சியப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இவருக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். மேலும் முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தான் வீடியோ வெளியிட்டதாகவும் தன்னை தண்டிக்க வேண்டும் என்றால் அத்தகைய செய்தி நிறுவனங்களையும் தண்டிக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.
ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்த போது கடுமையாக மறுத்த தமிழ்நாடு தரப்பு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட நபர் பத்திரிகையாளர் அல்ல என்றும், அவர் குறிப்பிட்ட கட்சி சார்பாக தேர்தலில் கூட போட்டியிட்டு இருக்கிறார் எனவே இது திட்டமிடப்பட்ட செயல் என் வாதத்தை முன் வைத்தார்.
கடைசியாக உத்தரவுகளை பிறப்பித்த தலைமை நீதிபதி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் தனக்கு எதிரான வழக்குகளை ஒன்றாக இணைக்க வேண்டும் எனக் கூறியும் யூடியூப்பர் தொடர்ந்த மனுவை விசாரிக்க முடியாது என்றும் இது தொடர்பாக மனுதாரர் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அமைதியுடனும் நிலைத் தன்மையுடனும் இருக்கக் கூடிய மாநிலங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எந்தவித செயல்களிலும் ஈடுபடக் கூடாது என தமிழ்நாடு குறித்து தலைமை நீதிபதி கருத்து கூறினார்.