ஏன் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்தேன் ? பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் விளக்கம்

ஏன் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்தேன் ? பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் விளக்கம்
ஏன் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்தேன் ? பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் விளக்கம்
Published on

பொறியியல் பட்டம் முடித்திருந்தும் துப்புரவு பணிக்கு விண்ணப்பம் செய்ததற்கான காரணத்தை இளைஞர் ஒருவர் விளக்கியுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமை செயலத்தில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணிக்காக 14 பேர் தேவை என்ற வேலைவாய்ப்பு செய்தி கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்தப் பணிக்காக சுமார் 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் எம்.பி.ஏ., பொறியியல், கலை மற்று அறிவியல் பட்டதாரிகள் உள்ளிட்டோரும் அடங்குவர். விண்ணப்பித்தவர்களில் 3930 பேருக்கு தகுதித்தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்டோர் விண்ணப்பித்திருப்பது தமிழகத்தில் வேலைக்கு இளைஞர்கள் படும் கஷ்டத்தை எடுத்துக் கூறும் விதமாக உள்ளது.

பொறியியல் பட்டம் படித்திருந்தும் எதற்காக துப்புரவு பணிக்கு விண்ணப்பித்தேன் என்பது குறித்து 23 வயது இளைஞரான தன்சிங் அருள் என்பவர் என்டிடிவி-க்கு பதில் அளித்துள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:- “ பொறியியல் பட்டம் முடித்திருந்தாலும் தற்போது 4 மாதங்களாக எந்தவித வேலையும் இல்லை. இதனால் மிகவும் சிரமப்படுகிறேன். இதற்கு முன்னதாக தினசரி ஊதிய அடிப்படையில் தூத்துக்குடியில் சில காலங்கள் வேலை பார்த்தேன். தற்போது எந்தவித வேலையும் இல்லை என்பதால் என்னால் துப்பரவு பணி கூட செய்ய முடியும். அதனால் அப்பணிக்கு விண்ணப்பித்துள்ளேன்.

என்னிடம் பழைய மாடல் ஒரு சிறிய போன்தான் உள்ளது. அதிலும் பேலன்ஸ் இல்லை. நண்பர் ஒருவரின் ஹாட்ஸ்பாட் உதவியுடன் தமிழக அரசு கொடுத்த இலவச லேட்டாப் வழியாகத் தான் இந்தப் பணிக்கு விண்ணப்பித்துள்ளேன். இணைய சேவை பெறுவதற்கு கூட என்னிடம் எந்த பணமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், “ வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது தான் எங்களின் கடமை. இருந்தாலும் ஐந்தாண்டு காலத்தில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர இயலாது. தனியார் துறைகளிலும் வேலை பெற இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும். இளைஞர்கள் பெரும்பாலும் அரசாங்க வேலையையே எதிர்பார்க்கின்றனர். அதில்தான் பாதுகாப்பு இருக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com