சீமான், துரைமுருகன், கார்த்திக் மீது எஸ்.பி கொடுத்த புகார்! என்ன நடந்தது? விரிவான பின்னணி!

சமீப காலமாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி பல நிர்வாகிகள் எஸ்.பி வருண்குமாரை விமர்சித்துவந்த நிலையில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன நடந்தது? விரிவாகப் பார்ப்போம்.
இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன், சீமான், எஸ்.பி வருண்குமார்
இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன், சீமான், எஸ்.பி வருண்குமார்புதிய தலைமுறை
Published on

திருச்சி எஸ்.பி வருண்குமார் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 22 பேரை, பதிவிடத் தூண்டியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மீதும் திருச்சி தில்லை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வருண்குமார் ஐபிஎஸ்
வருண்குமார் ஐபிஎஸ்

சமீப காலமாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி பல நிர்வாகிகள் எஸ்.பி வருண்குமாரை விமர்சித்துவந்த நிலையில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன நடந்தது? விரிவாகப் பார்ப்போம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி சைபர் கிரைம் போலீஸாரால், கடந்த ஜூலை 11-ம் தேதி கைது செய்யப்பட்டார் சாட்டை துரைமுருகன். அதற்கு, எஸ்.பி. வருண்குமார்தான் காரணம் எனவும் அவருக்கு சாதி ரீதியான வெறுப்பு இருக்கிறது எனவும் அவர்மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் சீமான்.

அதனைத் தொடர்ந்து, எஸ்.பி வருண்குமார்,

‘சாதிகள் இல்லையடி பாப்பா!

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’

என்ற பாரதியாரின் பாட்டை தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.

அது, அப்போது சீமானுக்கு பதில் சொல்லும் விதமாகவே பார்க்கப்பட்டது. தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியினர் குறித்து சீமான் பேசியதாக சில ஆடியோக்களும் வெளியாகின. அதற்கு, காவல்துறையை, குறிப்பாக எஸ்.பி வருணை காரணம் என குற்றம்சாட்டினர் நாம் தமிழர் கட்சியினர்.

தொடர்ந்து, சென்னை, வள்ளுவர் கூட்டத்தில் நடந்த கூட்டத்திலும் சீமான் காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அந்த வீடியோவைப் பகிர்ந்து, “தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் வருண் குமார்.

தவிர சீமானுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகின.

இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன், சீமான், எஸ்.பி வருண்குமார்
தவெக மாநாடு நடத்த இடம் கிடைப்பதில் பிரச்னை நிலவுகிறதா?.. சீமான் சொன்ன பதில்! நடப்பது என்ன?

இந்தநிலையில், நேற்று அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டதாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 22 பேர் மீது வருண்குமார் எஸ்.பி புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று அவர்கள் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தவிர, அவர்களைப் பதிவிட தூண்டியதாக சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவிர, மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதற்காக, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் நிர்வாகி கண்ணனை திருச்சி தில்லை நகர் போலீஸார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக திருச்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் எஸ்.பி.வருண் குமாரை மிரட்டல் விடும் தொனியில் கருத்துப் பதிவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். ‘தம்பி கரிகாலன்’ என்கிற பெயரில் எக்ஸ் தளத்தில் இயங்கிவரும் அவர், வருண் குமார் எஸ்.பியை டேக் செய்து, ``சாரே, நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரும் முன்னரே தயவு செய்து இறந்துவிடுங்கள். எங்கள் அண்ணா சொன்னாலும் கேட்கமாட்டோம். நீங்கள் தவறினாலும் அதன் பலனை சந்ததிகள் சந்திக்கும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும்...’’ என எச்சரிக்கும் விதத்தில் பதிவிட்டிருந்தார். இதை வருண் குமாரின் பதிவில் ரிப்ளை செய்துள்ளார். தற்போது தம்பி கரிகாலன் தன் பதிவை டெலிட் செய்துள்ளார்.

தம்பி கரிகாலனின் எக்ஸ் தள பதிவு
தம்பி கரிகாலனின் எக்ஸ் தள பதிவு

இதுகுறித்து வருண் குமார் அளித்த புகாரில், இன்று திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த தம்பி கரிகாலன் (எ) கண்ணன், தன் எக்ஸ் தளத்தில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பல வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன், சீமான், எஸ்.பி வருண்குமார்
"திமுகதான் பாஜகவின் மெயின் டீம்"- சீமான் தாக்கு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com