சசிகலாவை முன்மொழிந்தது ஏன்? பன்னீர் செல்வம் விளக்கம்

சசிகலாவை முன்மொழிந்தது ஏன்? பன்னீர் செல்வம் விளக்கம்
Published on

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் இன்று பேசினார். அப்போது, ஜல்லிக்கட்டு விஷயத்தில் நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பித்துரையை சந்திக்க, பிரதமர் விரும்பவில்லை என்றும், தன்னை வற்புறுத்தியதால்தான் சசிகலாவை பேரவைக் கட்சித் தலைவராக முன்மொழிந்தேன் எனவும் தெரிவித்தார். மேலும் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் அணுகுமுறை தெரியாதவர், தம்பித்துரை எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்து முதலமைச்சர் பதவியில் இருந்து விலகச் சொன்னார்கள். ஆனால் இப்போது கட்சியும், ஆட்சியும் வேறு வேறு இடத்தில்தான் இருக்கிறது’என்றார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவதே நோக்கம் எனவும், மத்திய அரசு கண்காணிப்பில் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரிய வரும் என்றும் அதற்காகவே தர்மயுத்தம் எனவும் அவர் கூறினார்.

‘சசிகலாவை தனது உதவியாளராக மட்டுமே ஜெயலலிதா அவர் வீட்டில் அனுமதித்தார். சசிகலாவுடன் யாரும் பேசக்கூடாது, பேச முயற்‌சிக்கக் கூடாது, பேச முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தாம் உயிருடன் இருக்கும் வரை சசிகலா உறவினர்களை கட்சியில் அனுமதிக்கவே மாட்டேன் என ஜெயலலிதா கூறியிருந்தார்’என்றும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com