கவனக்குறைவாக ஓட்டினால் ஏன் உரிமத்தை ரத்து செய்யக் கூடாது?: சென்னை உயர்நீதிமன்றம்

கவனக்குறைவாக ஓட்டினால் ஏன் உரிமத்தை ரத்து செய்யக் கூடாது?: சென்னை உயர்நீதிமன்றம்
கவனக்குறைவாக ஓட்டினால் ஏன் உரிமத்தை ரத்து செய்யக் கூடாது?: சென்னை உயர்நீதிமன்றம்
Published on

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் இருந்த இரும்புத் தடுப்புகள் மீது மோதியதோடு, இருசக்கர வாகனங்கள் மீது மோதியதால் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானது.

இதுதொடர்பான செய்திகளை மேற்கோள்காட்டிய நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தும் சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார். இதுபோன்று அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்கான தண்டனை 2 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டப்பிரிவை அமல்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அரசு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com