பறிபோன 5 உயிர்கள்.. எழும் ஏகப்பட்ட கேள்விகள்.. குடும்பத்தினரை என்ன சொல்லி யார் தேற்ற?

உயிரிழப்புகளுக்கு எண்ணிக்கையை வைத்து பேசுபவர்களை என்னவென்று சொல்வது? ஒரு உயிர் என்றாலும், ஓராயிரம் உயிர் என்றாலும் இழந்தது இழந்ததுதான். அந்த குடும்பத்திற்கு நம்மால் என்ன சொல்லி தேற்ற முடியும்.. உடனிருக்கிறோம் என்று சொல்வதைத் தவிர.
சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஹெலிக்காப்டர்கள், அலைமோதிய மக்கள் கூட்டம்
சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஹெலிக்காப்டர்கள், அலைமோதிய மக்கள் கூட்டம்pt web
Published on

திட்டமிடலில் நடந்த அவதி

எப்போதெல்லாம் கூட்டம் கூடுகிறதோ அப்போதெல்லாம் மறக்க முடியாத அனுபவங்களை சென்னை மெரினா தந்தந்துண்டு. புத்தாண்டு, காணும் பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் நல்ல அனுபவங்களை தந்த மெரினா, ஒரு மோசமான அனுபவத்தை தற்போது மக்களுக்கு தந்திருக்கிறது.

விமான சாகச நிகழ்ச்சி
விமான சாகச நிகழ்ச்சிpt web

அரசின் வெவ்வேறு துறைகளும், காவல் துறையினரும் அதிகாலை முதலே வான் சாகச நிகழ்ச்சிக்காக உழைத்திருந்தாலும், திட்டமிடலில் நடந்த குளறுபடிகள் பல்லாயிரக்கணக்கான மக்களை அவதியில் தள்ளிவிட்டது.

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் வெயில் உச்ச நிலையில் இருக்கும் தருவாயில், அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க அரசு ஏன் திட்டமிடவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இத்தனை லட்சம் மக்கள் திரண்டதால் அவர்களுக்கான குடிநீர், உணவு ஆகியவற்றுக்கு என்ன வழி? என்பதை அரசு சிந்திக்காததும் குறைபாடாகவே பார்க்கப்படுகிறது.

சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஹெலிக்காப்டர்கள், அலைமோதிய மக்கள் கூட்டம்
‘என்னா மனுஷன் யா..’ திருட சென்ற வீட்டில் துணி துவைத்து, சுத்தம் செய்து, சமைத்துவிட்டு சென்ற திருடன்!

விஐபிக்களுக்கு மட்டும் தனிசாலையா? எழும் குற்றச்சாட்டு

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், சாரை, சாரையாக கடற்கரைக்கு படையெடுத்த மக்கள், நிகழ்ச்சி முடிந்ததும், வீடு திரும்ப முண்டியடிக்ககூடும் என்பதும், அதனால் ஏற்படும் நெரிசல்களை தவிர்க்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும் அரசுக்கு சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அந்த வசதிகளை அரசு கோட்டை விட்டது ஏன்? என்பதுதான் மக்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது.

சென்னை விமான சாகச நிகழ்ச்சி - கூட்ட நெரிசல்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி - கூட்ட நெரிசல்புதிய தலைமுறை

விஜபி-களின் வாகனங்கள் மட்டுமே சென்று வருவதற்காக சர்வீஸ் சாலையும், காமராஜர் சாலையும் மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 2, 3 கிலோ மீட்டர் தொலைவில் பொதுமக்களின் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டதும் பெரும் குறைபாடு. நிகழ்ச்சி முடிந்த பின்னரும், காமராஜர் சாலையில் பொது போக்குவரத்தை அனுமதிக்காததால் குடும்பம் குடும்பமாக பல கிலோ மீட்டருக்கு பொதுமக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

சொந்த வாகனங்களை எடுப்பதற்காகவும், பொது போக்குவரத்தை தேடியும் சுமார் 5 கிலோ மீட்டர் வரை வெயிலில் மக்கள் நடையாய் நடக்க வேண்டியிருந்தது. சர்வீஸ் சாலையில் இருந்து பிரதான சாலைக்கு செல்லும் வழிகள் அடைக்கப்பட்டிருந்ததால் மேலும் பாதிக்கப்பட வேண்டிய நிலை இருந்தது. மெரினாவில் வழிநெடுகிலும் இருக்கும் உணவுக் கடைகளை, பாதுகாப்புக் கருதி அடைத்ததும் மக்கள் எளிதில் சோர்வடைய காரணமாக அமைந்துவிட்டது.

சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஹெலிக்காப்டர்கள், அலைமோதிய மக்கள் கூட்டம்
மாலத்தீவுக்கு மீண்டும் கைகொடுத்த இந்தியா.. பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிந்த பெரிய ஒப்பந்தம்!

ரயில் சேவையை அதிகரிக்காதது ஏன்?

விமான சாகச நிகழ்ச்சிக்கான வாகன நிறுத்துமிடம் ஏற்பாடுகள் குறித்து காவல்துறை மட்டுமே முன்கூட்டியே செய்தி குறிப்பு வெளியிட்ட நிலையில், சென்னை மாநகராட்சி எந்தவித செய்தி குறிப்பையும் வெளியிடாதது ஏன்? காணும் பொங்கல் அன்று செய்யும் ஏற்பாடுகளைக் கூட சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஹெலிக்காப்டர்கள், அலைமோதிய மக்கள் கூட்டம்
சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஹெலிக்காப்டர்கள், அலைமோதிய மக்கள் கூட்டம்pt web

நிகழ்ச்சி முடிந்த உடன் விஐபிகளின் வாகனங்கள் மட்டும் காமராஜர் சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொது போக்குவரத்தை அனுமதிக்காதது ஏன்? வாகன நிறுத்துமிடம் வரை நடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலையில், வழி நெடுகிலும் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், முதலுதவி வசதிகளை ஏற்படுத்தாதது ஏன்? மெரினா வழியாக இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவையை அதிகரிக்காதது ஏன்?

சேப்பாக்கம் கிரிக்கெட் போட்டிகளுக்கு திட்டமிட்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் சேவையை அதிகரித்த நிலையில், மக்களின் அவதிப் பற்றிய செய்திகளை ஊடகங்கள் ஒளிபரப்பிய பிறகே அதற்காக திட்டமிட்டது. 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை என்பதை மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை என இயக்கியது... ஆனாலும், தாமதமான திட்டமிடலால் மக்கள் அவதிக்கு ஆளாகவே நேரிட்டது...

சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஹெலிக்காப்டர்கள், அலைமோதிய மக்கள் கூட்டம்
ஓய்வூதியம் பெறுவோர் எச்சரிக்கை... ஜீவன் பிரமான் சான்றிதழ் புதுப்பிப்பதாக WhatsApp-ல் மோசடி! உஷார்!

உயிரிழப்புகளுக்கு எண்ணிக்கையை வைத்து பேசுபவர்களை என்னவென்று சொல்வது? ஒரு உயிர் என்றாலும், ஓராயிரம் உயிர் என்றாலும் இழந்தது இழந்ததுதான். அந்த குடும்பத்திற்கு நம்மால் என்ன சொல்லி தேற்ற முடியும்.. உடனிருக்கிறோம் என்று சொல்வதைத் தவிர...

சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஹெலிக்காப்டர்கள், அலைமோதிய மக்கள் கூட்டம்
சுயேட்சைகள் ஆதிக்கம் அதிகம்.. தொங்கு சட்டசபைக்கே வாய்ப்பு.. ஜம்மு காஷ்மீர் களநிலவரம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com