வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் யார் யாருக்கு நிவாரணத் தொகை வழங்குவது என்பது தொடர்பாக 4 மாவட்ட ஆட்சியர்களுடன் நிதித்துறை செயலர் ஆலோசனை நடத்தினார்.
காணொளி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். மழை பாதிப்பு எந்தந்த பகுதிகளில் அதிகமாக இருந்தது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் கேட்டறிந்தார். எந்தந்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விரிவா ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயும் சேதமடைந்த குடிசைகளுக்கு 8 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.