ஓய்வு பெறும் தலைமைச்செயலர் கிரிஜா : அடுத்த தலைமைச் செயலாளர் யார் ?

ஓய்வு பெறும் தலைமைச்செயலர் கிரிஜா : அடுத்த தலைமைச் செயலாளர் யார் ?
ஓய்வு பெறும் தலைமைச்செயலர் கிரிஜா : அடுத்த தலைமைச் செயலாளர் யார் ?
Published on

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுவதையொட்டி அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தமிழக அரசின் தலைமைச்செயலாளராக இருந்து வரும் கிரிஜா வைத்தியநாதன்,இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தலைமைச் செயலாளரை தேடும் பணி தொடங்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற கிரிஜா வைத்தியநாதன் 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவ‌ர். இவரது தந்தை வெங்கட்ராமன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர். முதுகலை இயற்பியல் பட்டதாரியான கிரிஜா, சென்னை ஐஐடியில் சுகாதார பொருளியியலில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் அவர் ஓய்வு பெறுவதையொட்டி அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற வரிசையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஆளுநரின் செயலாளர் ராஜகோபால், நிலநிர்வாகத்துறை ஆணையர் ஜெயக்கொடி, ஜிஎஸ்டி கவுன்சில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வரும் ராஜீவ் ரஞ்சன், தற்போதைய நிதித்துறை செயலாளர் கே.சண்முகம், உள்துறை செயலாளராக உள்ள நிரஞ்சன் மார்டி ஆகியோர் முன்னணி வரிசையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதில் ராஜகோபால், ராஜீவ் ரஞ்சன் ஆகியோருக்கு 2021ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில் மற்றவர்கள் ஓராண்டுக்கும் குறைவான அளவிலே பணிக்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் பதவி நீட்டிப்புக்கு கிரிஜா வைத்தியநாதன் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com