முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமை.. எப்படி எப்போது யாரால் கிடைத்தது தெரியுமா?

சுதந்திர தின விழாவில், மாநில முதலமைச்சர்களுக்கு தேசியக்கொடி ஏற்றும் உரிமை கிடைத்து 50 ஆண்டுகள் ஆகின்றன... இந்த உரிமை, மாநில முதலமைச்சர்களுக்கு வந்து சேர்ந்ததன் பின்னணியைப் பார்க்கலாம்...
கலைஞர் கருணாநிதி, இந்திரா காந்தி, முக ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதி, இந்திரா காந்தி, முக ஸ்டாலின்pt web
Published on

உரிமைக் குரல் எழுப்பிய கலைஞர் கருணாநிதி

சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், விடுதலை நாள் பெருவிழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த உரிமையை பெற்றுத் தந்தவர் நூற்றாண்டு நாயகர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்” என்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை, பெருமையுடன் நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார்.

50 ஆண்டுகளாகத்தான் முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றுகிறார்கள் என்பதே, இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. சுதந்திரம் கிடைத்ததில் இருந்து, தலைநகர் டெல்லியில், குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரும் சுதந்திர தினத்தன்று பிரதமரும் தேசியக்கொடி ஏற்றி வந்தனர். மாநிலங்களின் தலைநகரில், சுதந்திர தினமாக இருந்தாலும் குடியரசு தினமாக இருந்தாலும், இரண்டு கொண்டாட்டங்களிலுமே ஆளுநர்கள்தான் தேசியக்கொடியை ஏற்றினர்.

முதலமைச்சர் தேசியக்கொடியை ஏற்ற முடியாது. இதற்கான உரிமைக்குரலை முதல்முறையாக எழுப்பியவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், தேசியக்கொடியை ஏற்றும் உரிமை பெற்றிருக்கும்போது, அதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களுக்கு தேசியக்கொடியை ஏற்ற உரிமை இல்லையா”
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி

என்று முழங்கினார் அவர்.

கலைஞர் கருணாநிதி, இந்திரா காந்தி, முக ஸ்டாலின்
குரங்கம்மையில் புதியவகை; பதற்றத்தில் உலக நாடுகள்.. அவசர நிலையாக கருதும் WHO.. இந்தியாவின் நிலை என்ன?

ஆணை பிறப்பித்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி

1969 ல் சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய கருணாநிதி, முதலமைச்சர்களுக்கு தேசியக்கொடி ஏற்றும் உரிமை வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தினார். இந்த உரிமையை முன்வைத்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். நேரிலும் வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசு தீர்மானமும் நிறைவேற்றியது.

இந்த நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது 1974 ல். கலைஞரின் உரிமைக்குரலை ஏற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதலமைச்சர்களுக்கு வழங்கினார். அதாவது, ஜனவரி 26 குடியரசு தின விழாவில் மாநில ஆளுநரும், சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சரும் தேசியக் கொடியை ஏற்றுவார்கள் என்று ஆணை பிறப்பித்தார்.

கலைஞர் கருணாநிதி, இந்திரா காந்தி, முக ஸ்டாலின்
தாய்லாந்து: அடுத்த பிரதமர் வேட்பாளர் தேர்வு... யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?

முதல்முறையாக கொடியை ஏற்றிய கலைஞர் கருணாநிதி

அந்த ஆண்டில், அதாவது 1974 ல் கொண்டாடப்பட்ட, விடுதலை நாள் விழாவில், முதல்முறையாக கோட்டை கொத்தளத்தில் கலைஞர் கருணாநிதி ஏற்றிய தேசியக் கொடி, பட்டொளி வீசி பறந்து, முதலமைச்சரின் உரிமையை பறைசாற்றியது. முதலமைச்சருக்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்து, தமிழ்நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றிய முதல் முதலமைச்சர் என்ற பெருமையையும் பெற்றார் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களின் முதலமைச்சருக்கும் சேர்த்தே, உரிமையைப் பெற்றுக் கொடுத்தார் கருணாநிதி.

மாநிலங்களின் சுயாட்சி குறித்து இன்று பல்வேறு மாநிலங்களும் பேசுகின்றன. அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, மாநில உரிமைகளை முழங்கி அதை பெற்றுக் கொடுத்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டில், அவர் வாங்கிக் கொடுத்த உரிமை பொன்விழா கொண்டாடுகிறது என்ற வியத்தகு பெருமையும் சேர்ந்திருக்கிறது.

கலைஞர் கருணாநிதி, இந்திரா காந்தி, முக ஸ்டாலின்
2 பந்தில் 2 விக்கெட்.. த்ரில் வெற்றிபெற்ற கவுண்டி அணி.. இங்கிலாந்தில் கலக்கிய வெங்கடேஷ் ஐயர்! #Video

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com