இரண்டு நாட்கள் சென்னையில் களைகட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. அதன் பலன்கள் என்ன..?
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற 2024 உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல் நாளிலேயே அரசின் இலக்கான ரூ.5.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில்நிறுவனத் தலைவர்களும், 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அதிகப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இரண்டாவது நாளின் முடிவில், கோத்ரேஜ், பெகாட்ரான், டிவிஎஸ், ஹூண்டாய், ஜேஎஸ்டபள்யு, டாடா எலக்ட்ரானிக்ஸ், வின்ஃபாஸ்ட், டாடா மற்றும் அதானி குழுமம் என பல்வேறு முன்னனி நிறுவனங்கள் சுமார் ரூ.6.64 லட்சம் கோடி மூதலீட்டில் ஒப்பந்தம் செய்து தமிழக அரசின் இலக்கை பூர்த்திசெய்தன. கவனிக்கும்படியான முதலீடுகளாக வின்ஃபாஸ்ட் ரூ.16,000 கோடி, அதானி குழுமத்தின் ரூ.42,768 கோடி மற்றும் டாடா நிறுவனம் ரூ.70,800 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்நிலையில் இந்தமுதலீடுகளால் எந்தெந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் பலனடைவார்கள் என்பது குறித்து ஜவுளி உற்பத்தி துறை மற்றும் ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களிடம் புதியதலைமுறை விவாதித்துள்ளது. இதுகுறித்த முழுதகவலையும் காணொளியில் காணலாம்..