கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்

கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
Published on

கணினி நிபுணர்கள் மூன்று பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றிருக்கிறார்கள் என முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து பாதுகாக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தேவையற்ற ஆட்கள் நடமாட்டம் இருப்பதாகவும் வாகனங்கள் சென்று வருவதாகவும் மடிக்கணினியுடன் வெளியாட்கள் சென்று வருவதாகவும் தகவல்கள் வந்த நிலையில் திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், நெய்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தெரிவிக்கப்படாத காரணங்களுக்காக என்ற காரணம் சொல்லி கணினி நிபுணர்கள் மூன்று பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு, அந்த கட்டடத்திற்குள் சென்றிருக்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

கணினி நிபுணர்கள் மூன்று பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றிருக்கிறார்கள் என முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com