தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான யானை திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் வீதி உலா சென்றது.
ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமானுக்கு, சிவன் வெள்ளை யானை உருவத்தில் காட்சி கொடுத்ததாக புராணக் கதை கூறுகிறது. அதனை நினைவுகூறும் வகையில் கோயில் யானைக்கு திருநீறு பூசி, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.