”எங்களுக்கு எங்கே ஓடுறது என்றே தெரியல” - விபத்தை நேரில் பார்த்தவர் வேதனை- வீடியோ

”எங்களுக்கு எங்கே ஓடுறது என்றே தெரியல” - விபத்தை நேரில் பார்த்தவர் வேதனை- வீடியோ
”எங்களுக்கு எங்கே ஓடுறது என்றே தெரியல” - விபத்தை நேரில் பார்த்தவர் வேதனை- வீடியோ
Published on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர் ஆர்‌வெங்கடாபுரம்‌ கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு ‌இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. காற்றில் கலந்து பரவிய விஷ‌வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும்‌ மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த பாதிப்புகளால் ஒரு குழந்தை உள்ளிட்ட 3 பேர் ‌உயிரிழந்தனர். மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலையில் நடந்து சென்றவர்கள் மயங்கி விழுந்தனர். 

 இந்த விபத்தை நேரில் பார்த்த ஒரு நபர் கூறும்போது “ அதிகாலையில் தொழிற்சாலையில் இருந்து கசிந்த ரசயான புகையால் இந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. எங்களுக்கு எங்கே ஓடுவது எனத் தெரியவில்லை. இங்கு இருந்த மக்கள் நடந்து கொண்டிருந்தபோதே மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர்” என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வினய் கூறும் போது “ 2 மணி நேரத்திற்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார். மூச்சுத்திணறலால் அவதிபடுபவர்களுக்கு ஆக்ஸிஜன் வாயு கொடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com