வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: வாட்ஸ் அப்

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: வாட்ஸ் அப்
வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: வாட்ஸ் அப்
Published on

வாட்ஸ்அப் மூலம் வதந்தி மற்றும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

குழந்தைக்கடத்தல் உள்பட வாட்ஸ்அப்பில் பரவும் வதந்திகளால் பல அசம்பாவிதங்கள் நடைபெறுவது தொடர்கதையாகிவிட்டது. இதுகுறித்து வேதனை தெரிவித்திருந்த உச்சநீதிமன்றம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதுகுறித்த தகவலை வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு தெரியப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், வதந்தி மற்றும் தவறான தகவல்களை வாட்ஸ்-அப்பில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது என்று தனது விளக்கத்தில் வாட்ஸ்அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com