பெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்

பெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்
பெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்
Published on

பெரம்பலூர் அருகே குன்னம் ஏரியில் கண்டறியப்பட்ட ராட்சச முட்டை போன்ற உருண்டைகள், டைனோசர் முட்டை இல்லை என்று தெரியவந்துள்ளது.

பெரம்பலூர் அருகே குன்னம் ஏரியை ஆழப்படுத்தும் போது ராட்சச முட்டை வடிவிலான உருண்டைகள் கண்டறியப்பட்டது.பெரம்பலூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகள் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு கடற்பகுதியாக இருந்தது என கூறப்படுவதால் தற்போது கண்டறியப்பட்ட ராட்சத முட்டை  உருண்டைகள் டைனோசர் முட்டையாக இருக்கும் என தகவல் பரவியது.அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் அவை டைனோசர் முட்டை இல்லை என்று தெரியவந்துள்ளது, அவை கடல் வாழ் உயிரினங்களின் படிம பாறைகள் என்று திருச்சி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நத்தை போன்ற கடல்உயிரினங்களின் படிமங்கள் மீது அம்மோனைட் படிவதே இது போன்ற பாறைகள் ஏற்பட காரணம் என தெரிவித்த அவர், குன்னம் பகுதியில் அம்மோனைட் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com