நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதன் காரணம் என்ன?

நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதன் காரணம் என்ன என விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
புதிய மாநகராட்சிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்
புதிய மாநகராட்சிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்pt web
Published on

திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதன் காரணம் என்ன என விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

கோயில் நகரமாக விளங்கும் திருவண்ணாமலை, கல்வி நகரமாக விளங்கும் காரைக்குடி, தொழில் நகரமான நாமக்கல் மற்றும் வரலாற்று நகராக விளங்கும் புதுக்கோட்டை ஆகியவை, மாநகராட்சிகளாக உதயமாகியுள்ளன. இதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அந்தந்த நகராட்சிகளின் மாமன்ற தலைவர்களிடம் வழங்கியிருக்கிறார். இதன்மூலம் தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்திருக்கிறது..

புதிய மாநகராட்சிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்
கொல்கத்தா | பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் பயிற்சி மருத்துவர் கொலை! வெடித்தது போராட்டம்!

நான்கு நகராட்சிகளோடு அவற்றுக்கு அருகேயுள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்டவற்றை இணைத்து, அவை மாநகராட்சிகளாக உருவாக்கப்பட்டிருக்குன்றன. திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கைகளை ஏற்று, அதன்படி அவை மாநகராட்சிகளாக உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரும் நோக்கோடு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. மேலும் இதன்மூலம் குடிமை சேவைகள் சிறப்பாக வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com