ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு பரவுவதால் கொரோனா தொற்று எண்ணிக்கை கூடி வருவதாகவும், தொற்று குறைவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதாக கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பேசும்போது, ‘’கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே 3 ஆயிரத்து 100 படுக்கைகள் வசதியுடன் சுமார் 12 முதல் 15 வரை கொரோனா சிகிச்சை மையங்கள் அரசு மூலம் இயங்கி வருகிறது. அந்தந்த கிராம ஊராட்சி அளவிலும் ஊரக பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் சில இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளது. கூடுதலாக முழுக்க முழுக்க தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கில் தொற்று பரவல் பெருமளவில் குறைக்கப்படும் என நம்பப்படுவதாகவும், இரண்டரை வாரங்கள் என கணக்கிடப்பட்டுள்ளததாகவும், இந்த ஊரடங்கின் முழு பயன் அடுத்த ஒரு சில நாட்களில் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, ஊரடங்கை கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்றும்போது தொற்று பரவல் தடைபடும்.
ஒருவரிடமிருந்து ஒரு நபருக்கு மேல் தொற்று பரவினால் கட்டுப்பாடற்ற தொற்று கூடிக்கொண்டே இருக்கும், ஆனால் அது குறைந்தபட்ச அளவில் ஒன்றை விட என்ற அடிப்படையில் இருந்தால் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தொற்று விதிகளின் அடிப்படை என்பதால் தொடர்ச்சியாக ஊரடங்கு இருக்கும் என ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மாவட்டம் முழுவதும் 700 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பாதிக்காதவாரு அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆக்சிஜன் தேவையை பொருத்தவரை, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின்றி கிடைக்கிறது.
ஒரு நாளைக்கு ஒரு கிலோ லிட்டர் என பெற்று வந்த 100 படுக்கை வசதிகள் கொண்ட 20 மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. தட்டுப்பாடு ஏற்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் போதுமான ஆக்சிஜன் கிடைத்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.