வெளிநாடுகளில் பாலியல் வன்கொடுமை குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தையே உலுக்கிய போரூர் சிறுமி வன்கொடுமை முதல் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வரை, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பெரும்பாலும் 1 வாரத்திற்கு பேசும்பொருளாய் இருந்துவிட்டு அதன்பின் மறைந்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற குற்றங்கள் நடந்தால் பிற நாடுகளில் உடனடியாக வழங்கப்படும் உச்சபட்ச தண்டனைகள் என்னென்ன தெரியுமா ?
அரபு நாடான சவுதியில், பாலியல் வன்கொடுமை குற்றம் நிரூபிக்கப்பட்டால் மக்கள் முன் நிறுத்தப்பட்டு மரண தண்டனை வழங்கப்படும். ஐக்கிய அமீரகத்தில் ஏழு நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஈரானில் குற்றவாளிகள் கல்லால் அடித்துக் கொலை செய்யப்படுகின்றனர் அல்லது 24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட பெண்ணால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இதேபோல வடகொரியாவிலும் பாதிக்கப்பட்ட பெண்ணால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அண்டை நாடான சீனாவில் பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. மலேசியாவிலும் பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இதேபோல, மங்கோலியாவில் குற்றவாளிகளைக் கல்லால் அடித்து கொலை செய்கின்றனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. எகிப்தில் மக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நெதர்லாந்தில் 4 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது.