அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள் :காரணங்கள் என்ன ?

அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள் :காரணங்கள் என்ன ?
அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள் :காரணங்கள் என்ன ?
Published on

2017 ஆம் ஆண்டில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆயிரத்து 156 குழந்தைத் திருமணங்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகள் நலத்திற்கான இந்திய ஆணையம் மற்றும் யுனிசெப் சென்னை அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில்,2017 ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரத்து 636 குழந்தைத் திருமணங்கள் அரசால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

இதில் 75 சதவித திருமணங்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேபோல, 52 சதவிகித திருமணங்கள் குழந்தைகளின் ஒப்புதலின்றி நடத்தப் பட்டவையாகும். திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டவர்களின் வயது சராசரியாக 16 வயதாக இருந்திருக்கிறது. 

மணவயதை எட்டும் முன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் பொருளாதார நெருக்கடிக்காக 33 சதவிதம் பேருக்கும், காதல் திருமணம் செய்துகொள்வதை தவிர்ப்பதற்காக 17% பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அச்சம் காரணமாக 11% பேருக்கும், குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையை காரணமாக கருதி 11% பேருக்கும், காதலித்து திருமணம் செய்ததாக 95% பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முன் கர்ப்பம் தரித்ததால் 1% பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com