தமிழ்நாடு
மரபணு மாற்றம் செய்வதன் மூலம் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை! புதிய CAR -T செல் சிகிச்சை என்றால் என்ன?
புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. CAR -T செல் சிகிச்சை முறையால் புற்றுநோய்க்கு தீர்வு காண முடியும் என்கிறது மருத்துவ உலகம்.
மரபணு மாற்றம் செய்வதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையளிக்கும் முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீமோதெரபி, ரேடியேசன் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும், அதை பெறும் பெரும்பாலான நோயாளிகள் முழுவதுமாக நோயிலிருந்து விடுபட்டு வெளியே வருவது அரிதான ஒன்றாகவே இருந்துவருகிறது.
இதனால் புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், CAR -T செல் சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. T செல்லில் மரபணு மாற்றம் செய்வதன் மூலம் புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் முழுமையாக இந்நோயிலிருந்து வெளிவர முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இது எப்படி சாத்தியம்? விவரத்தை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.