”பழனியில் நடந்தது ஆன்மிக மாநாடு அல்ல; அது இந்து விரோத மாநாடு.. உதயநிதி ஒரு சனாதன விரோதி” – ஹெச்.ராஜா

மாணவர்கள் என்ன மொழி படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ஊழல் பேர்வழி பொன்முடி யார் என பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
H.Raja
H.Rajapt desk
Published on

செய்தியாளர்: விவேக்ராஜ்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா பேசும்போது....

H.Raja
H.Rajapt desk

”அரசு பணத்தில் முதலமைச்சர் குடும்பத்துடன் 17 நாள் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். பழனியில் நடந்தது ஆன்மிக மாநாடு அல்ல என உதயநிதி ஸ்டாலின் சொன்னது சரிதான். அது இந்து விரோத மாநாடு. முருகனை வைத்து தமிழ்நாட்டில் ஏமாற்று அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சனாதன இந்து தர்மத்தின் எதிரி உதயநிதி ஸ்டாலின்.

H.Raja
"தப்பு பண்ற ஆம்பளையத்தான் தூக்கி வெச்சு கொண்டாடுறீங்க" - ஆதங்கத்தோடு சொன்ன ராதிகா சரத்குமார்!

இந்து விரோதியின் அடிமை அரசாங்கம் விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்துக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் பாஜக, இந்து அமைப்புகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

udhayanidhi
udhayanidhipt web

உங்களுடைய தலைவர் கருணாநிதி கொண்டு வந்ததுதான் சமச்சீர் கல்வி. ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் சமச்சீர் கல்வி கொடுப்பதில்லை. அப்படி என்றால் நீங்களே கருணாநிதியை மதிக்கவில்லை என்று அர்த்தம்.

மொழிக் கொள்கையில் இதுபோன்று நீங்கள் பிடிவாதமாக இருந்தால், திமுகவில் உள்ள தலைவர்கள் டிஆர்பாலு, ஆற்காடு வீாாசாமி, துரைமுருகன் ஆகியோரின் குடும்பத்தில் நடத்தப்பட்டு வரும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளி வாசல்களிலும் போராட்டம் நடக்கும். முதலில் அதை சமச்சீர் கல்வியாக மாற்ற வேண்டும்.

H.Raja
விஜய்யின் நோ ரெஸ்பான்ஸ்.. தனித்துப் போட்டியிட திட்டம்.. சீமானின் முடிவுக்கு காரணம் இதுதானா?

மாணவர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கட்டும். நீங்கள் யார்? மொழி படிக்கக் கூடாது என தடுப்பதும் தவறுதான், திணிப்புதான்” என காட்டமாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com