தமிழக சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதாவில் உள்ள விவரங்களை பார்க்கலாம்.
இந்த சட்டம் அமலாகும் பட்சத்தில் வரியை செலுத்தாதோரை கைது செய்வதற்கான அதிகாரம் வரி வசூல் செய்யும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை, வரி செலுத்தாதோர் மீது அபராதம் விதிப்பது மற்றும் வழக்குப்பதிவு செய்வது மட்டுமே இருந்து வந்தது. நுழைவு வரி, மதிப்புக்கூட்டு வரி, கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் நீக்கப்பட்டு ஒரே வரியாக ஜிஎஸ்டி இருக்கும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பரிந்துரைகள் செய்ய சரக்கு மற்றும் சேவை வரி மன்றம் ஏற்படுத்தப்படும். இந்த மன்றம் அமைக்கும் வரை தற்போது மாநில அரசு விதிக்கும் வாட் வரியே பெட்ரோல் டீசலுக்கு பொருந்தும். மதுபானங்களுக்கு 20 சதவிகிதத்திற்கு மேற்படாமல் வரி விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த அதிகாரிகளுக்கு என்ன என்ன அதிகாரம் என்பதும் ஜிஎஸ்டி மசோதாவில் விளக்கப்பட்டிருக்கிறது.