காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகராட்சியில் நகரமன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் பல்வேறு பகுதிகளில் ரூ.4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்காக்கள், சமுதாய கூடம், அங்கன்வாடி கட்;டடம் மற்றும் பல்வேறு கட்டடங்களை திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மதன் ஏற்பாட்டில் மணிகண்டன் நகர் பூங்கா அருகில் நலத்திட்டங்கள் ,மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் திமுக திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர்.
இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் மக்களுக்கான திட்டங்கள் மக்களின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றப்படும்.
அந்த வகையில் குன்றத்தூர் நகராட்சியில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சிறப்பான வளர்ச்சிப் பணிகள் திட்டங்கள் செய்துள்ளதாக திட்டங்கள் குறித்து எடுத்து உரைத்தார். மேலும் குன்றத்தூர் முருகன் கோயிலில் முகூர்த்த நாட்களில் அதிக திருமணங்கள் நடைபெறுவதால் ஏழை எளிய மக்கள் திறந்த வெளியில் திருமணத்தை நடைத்துவதை தவிர்க்கும் பொருட்டு அவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடி செலவில் புதிய திருமண மண்டம் வர உள்ளது இதற்கான பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறினார்..