பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு

பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு
பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு
Published on

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்வோரும் தலைக்கவசம் அணிந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சாலை விபத்துகளைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், இந்த ஆண்டு ஜூலை வரை 38 ஆயிரத்து 491 விபத்துகள் நடந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் அதில், இருசக்கர வாகனங்களால் மட்டும் 15 ஆயிரத்து 601 விபத்துகள் நேர்ந்திருப்பதாகவும், 2 ஆயிரத்து 476 பேர் இறந்திருப்பதாகவும் குறிப்பாக, தலைக்கவசம் அணியாமல் இறந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 811 எனவும் குறிப்பிட்டுள்ளது. 

எனவே, இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் தலைக்கவசம் அணிவதும், கார்களில் பயணிப்போர் சீட்பெல்ட் அணிவதும் அவசியம். மேலும், மோட்டார் வாகனச் சட்டப்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனக்கூறியுள்ள தமிழக அரசு, மோட்டார் வாகன சட்டப்படியும், உயர்நீதிமன்ற உத்தரவுபடியும் அதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளது. காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறையினரால் இதுதொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com