மீட்புப் பணியை எந்தவிதத்திலும் கைவிடமாட்டோம்: ராதாகிருஷ்ணன்

மீட்புப் பணியை எந்தவிதத்திலும் கைவிடமாட்டோம்: ராதாகிருஷ்ணன்
மீட்புப் பணியை எந்தவிதத்திலும் கைவிடமாட்டோம்: ராதாகிருஷ்ணன்
Published on

சுர்ஜித்தை மீட்கும் நடவடிக்கையில் நிபுணத்துவம் கொண்டகுழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி, நடுகாட்டுப்பட்டியில் தொடர்ந்து நடந்து வருகிறது. அங்கு செய்தியாளர்களை இன்று சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘’ஜெர்மன் இயந்திரம் மூலம் குழி தோண்டியும் பலனில்லை. கடினமான பாறைகள் இருக்கின்றன. குழந்தையின் மீது மண் மூடியிருக்கிறது. இது டெக்னிக்கல் ஆபரேஷன். நிபுணத்துவம் கொண்ட குழு இதில் பங்கெடுத்து வருகிறது.

குழந்தை 88 அடியில் இருக்கிறது. நாங்கள் 98 அடி தோண்டி, பிறகு குறுக்கே குழி தோண்ட முடிவு செய்துள்ளோம். அது விரைவில் முடியும் என்று நினைத்தோம். ஆனால், பாறைகள் காரணமாக அதன் நேரம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து தோண்டினால் கரிசல் மண் தென்பட வாய்ப்பு இருக்கிறது என கூறுகிறார்கள். அதனால் தொடர்ந்து தோண்டு வோம். மீட்புப் பணியை எந்தவிதத்திலும் கைவிடமாட்டோம். கடைசி விளிம்புவரை எங்கள் பணியை தொடர்வோம். இந்தப் பணி முடிய 12 மணி நேரம் ஆகலாம்’’ என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com