“எரியூட்ட வாய்ப்பில்லாமல் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் பிணங்கள்” - முத்தரசன் வேதனை

“எரியூட்ட வாய்ப்பில்லாமல் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் பிணங்கள்” - முத்தரசன் வேதனை
“எரியூட்ட வாய்ப்பில்லாமல் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் பிணங்கள்” - முத்தரசன் வேதனை
Published on

இந்தியாவில் கொரனாவால் இறந்த பிறகும் எரியூட்ட வாய்ப்பில்லாமல் வரிசையாக பிணங்களை வைத்துக் கொண்டிருக்கும் மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மே தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கொடியேற்றினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, "உலகம் முழுவதும் வாழுகின்ற தொழிலாளர்கள் நாடுமுழுவதும் இருக்கின்ற தொழிலாளி வர்க்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புரட்சிகரமான மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, கொரோனா என்கிற கொடிய தொற்று காரணமாக உலகமே மிக மோசமான பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மற்ற நாடுகளை விட மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு, போதுமான படுக்கை வசதிகள் இல்லாதது போன்ற மிக மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சுனாமி ஏற்பட்டபோது ஒரே குழியில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் குழந்தைகள் முதியவர்கள் என வித்தியாசங்கள் இல்லாமல் ஆயிரக்கணக்கான சடலங்களை ஒரே குழியில் போட்டு புதைத்த கொடுமையான சம்பவம் நடைபெற்றது.

இன்றைக்கு அதை விட மிக மோசமாக இறந்ததற்குப் பிறகு எரியூட்ட வாய்ப்பில்லாமல் வரிசையாக பிணங்களை வைத்துக் கொண்டிருக்கிற மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டு இந்த கொரோனாவிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும். தொழிலாளர்கள் கடந்த நூற்றாண்டு காலமாக போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாத்து கொள்ளவும் இந்த மே நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com