2 பேர் இருந்தாலும் போராட்டம் தொடரும் - சென்னை பல்கலை. மாணவர்கள் உறுதி

2 பேர் இருந்தாலும் போராட்டம் தொடரும் - சென்னை பல்கலை. மாணவர்கள் உறுதி

2 பேர் இருந்தாலும் போராட்டம் தொடரும் - சென்னை பல்கலை. மாணவர்கள் உறுதி
Published on

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி சென்னை பல்கலைக் கழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பல்கலைக்கழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து ஆதரவு அளித்தார். போராட்டம் காரணமாக பல்கலைக் கழகத்திற்கு கிறிஸ்துமஸ் விடுமுறை முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வரவேண்டாம் என பல்கலைக் கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களின் போராட்டம் இரவிலும் கூட தொடர்ந்து வருகிறது.

போராட்டம் குறித்து பேசிய மாணவி ஒருவர், “மூன்றாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். கலைந்து செல்லும் படி காவல்துறையினர் வற்புறுத்துகிறார்கள். கல்லூரி நிர்வாகம் ஆதரவு தர மறுக்கிறார்கள். எங்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடரும். இது மக்களுக்கான போராட்டம். எங்களை பார்த்து பல கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கி வருகிறார்கள். இப்போது 25 மாணவர்கள் இருக்கிறோம், 2 பேர் இருந்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்” என தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே இன்று இரவு முதல் கல்லூரி விடுதி செயல்படாது என்றும், மாணவர்களை சொந்த ஊர்களுக்கு செல்லுமாறும் கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com