நியாயமான முறையில் எந்த முடிவு வந்தாலும் ஏற்போம் - பாக்கியராஜ்

நியாயமான முறையில் எந்த முடிவு வந்தாலும் ஏற்போம் - பாக்கியராஜ்
நியாயமான முறையில் எந்த முடிவு வந்தாலும் ஏற்போம் - பாக்கியராஜ்
Published on

நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் நியாயமான முறையில் எந்த முடிவு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், தனியார் மருத்துவமனை சார்பில் உலக சிறுநீரக தினத்தையொட்டி நடைப்பயண விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாக்கியராஜ் பங்கேற்று, நடைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நடிகைகள் சாயாசிங், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நடிகர் பாக்கியராஜ் போட்டியிட்டு இருந்தார். வரும் 20ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, நியாயமான முறையில் எந்த முடிவு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என நடிகர் பாக்கியராஜ் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com