சென்னை அரும்பாகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டர்.
அப்போது அவர் பேசுகையில், “வெளிதொடர்பு மற்றும் உள்தொடர்பிலிருந்து மருத்துவப் பணிக்கு தற்காலிகமாக வந்தவர்களை முறைபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, அப்பணியிலிருக்கும் தற்காலிக பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். கொரோனா பேரிடர், மழைக்கால இன்னல்கள் என தொடர்ச்சியாக அடுத்தடுத்து அவசரகாலம் வந்துகொண்டிருப்பதால் இந்த பேச்சுவார்த்தை தாமதமாகிறது. விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். குறைந்தபட்சபாக 10 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் அவர்களுக்கு அரசால் என்ன மாதிரியான மாற்று ஏற்பாடு செய்ய முடியுமோ அதை செய்வோம்.
தமிழக பட்ஜெட்டில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அப்பல்கலைக்கழகம் தொடங்கப்படும். தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார்” என்று கூறினார். நிகழ்ச்சியின்போது அமைச்சருடன் மருத்துவத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் இருந்தார்.