”ரோட்டை காணோம்” : வடிவேலு பாணியில் போலீசில் புகார் அளித்த மடிப்பாக்கம் குடியிருப்புவாசிகள்

”ரோட்டை காணோம்” : வடிவேலு பாணியில் போலீசில் புகார் அளித்த மடிப்பாக்கம் குடியிருப்புவாசிகள்
”ரோட்டை காணோம்” : வடிவேலு பாணியில் போலீசில் புகார் அளித்த மடிப்பாக்கம் குடியிருப்புவாசிகள்
Published on

வடிவேலு பாணியில் மடிப்பாக்கம் பஜார் சாலையில் இருந்து, ஜே.கே. செல்லும் ரோட்டை காணவில்லை என பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பு வாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கம், பஜார் சாலையை ஒட்டியுள்ள பகுதி பாகீரதி நகர், ஸ்ரீனிவாசா நகர். அங்கு, 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தனியார் பள்ளி ஒன்றும் உள்ளது. பாகீரதி நகருக்கான 'லேஅவுட்', 1973ல் தயாரானபோது, பஜார் சாலையில் இருந்து ஜே.கே. செல்ல ரோடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ரோட்டை பகுதிவாசிகளும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பஜார் சாலையில் இருந்து ஜே.கே. செல்லும் பிரதான ரோட்டை பட்டா இடம் என்று கூறி தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதுகுறித்த புகாரின் படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி கொடுத்தனர். அடுத்த சில மாதங்களில் மீண்டும் அந்த ரோடு அடைக்கப்பட்டு விட்டது.

அன்றையில் இருந்து தொடர்ந்து போராடி வரும் பகுதி மக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், ரோடு இருந்ததற்கான ஆதாரங்களை சேகரித்தனர். அடுத்த கட்டமாக, சோழிங்கநல்லூர் தாசில்தாரிடம் முறையிட்டனர். சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த் துறை வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகும் இப்பிரச்னை கிடப்பில் உள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் சார்பில் இன்று, ரோட்டை காணவில்லை என வடிவேலு பாணியில், அதனை மீட்டுத் தரும்படி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com